கர்நாடகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு


கர்நாடகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 25 April 2021 2:20 AM IST (Updated: 25 April 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நேற்று புதிய உச்சத்தை தொட்டது. 29,438 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 208 பேர் இறந்தனர்.

பெங்களூரு:

  கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதிய உச்சம்

  மாநிலத்தில் நேற்று ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 613 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 29,438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 4 ஆயிரத்து 397 ஆக உயர்ந்து உள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 208 பேர் இறந்தனர். நேற்று பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சமாக பதிவாகி உள்ளது.

  அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 17 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டனர். இதுதவிர பாகல்கோட்டையில் 105 பேர், பல்லாரியில் 731 பேர், பெலகாவியில் 313 பேர், பெங்களூரு புறநகரில் 684 பேர், பீதரில் 365 பேர், சாம்ராஜ்நகரில் 295 பேர், சிக்பள்ளாப்பூரில் 506 பேர், சிக்கமகளூருவில் 185 பேர், சித்ரதுர்காவில் 114 பேர், தட்சிண கன்னடாவில் 517 பேர், தாவணகெரேயில் 254 பேர், தார்வாரில் 385 பேர், கதக்கில் 76 பேர், ஹாசனில் 823 பேர், ஹாவோியில் 92 பேர், கலபுரகியில் 791 பேர், குடகில் 196 பேர், கோலாரில் 373 பேர், கொப்பலில் 266 பேர், மண்டியாவில் 688 பேர், மைசூருவில் 536 பேர், ராய்ச்சூரில் 497 பேர், ராமநகரில் 385 பேர், சிவமொக்காவில் 266 பேர், துமகூருவில் 1,559 பேர், உடுப்பியில் 403 பேர், உத்தர கன்னடாவில் 185 பேர், விஜயாப்புராவில் 411 பேர், யாதகிரியில் 95 பேர் பாதிக்கப்பட்டனர்.

8 மாவட்டங்களில்....

  பெங்களூரு நகரில் 149 பேர், கலபுரகியில் 8 பேர், கோலாரில் 6 பேர், தார்வாரில் 5 பேர், மைசூருவில் 4 பேர், பல்லாரி, பெங்களூரு புறநகர், ஹாவேரி, மண்டியா, சிவமொக்கா, துமகூருவில் தலா 3 பேர், உத்தர கன்னடா, விஜயாப்புரா, ராய்ச்சூர், குடகு, ஹாசன், தாவணகெரே, தட்சிண கன்னடாவில் தலா 2 பேர், பெலகாவி, சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூருவில் தலா ஒருவர் என 208 பேர் இறந்தனர். 8 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

  நேற்று 9 ஆயிரத்து 58 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை 10 லட்சத்து 55 ஆயிரத்து 612 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 லட்சத்து 34 ஆயிரத்து 483 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,128 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 2 கோடியே 43 லட்சத்து 56 ஆயிரத்து 635 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. நேற்று 8 லட்சத்து 38 ஆயிரத்து 736 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

  கர்நாடகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியது.

Next Story