ஊரங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்; போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் எச்சரிக்கை
ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
தென்காசி மாவட்டத்திலும் முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஊரங்கை மீறி வெளியில் தேவை இல்லாமல் சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் கூறியதாவது:-
இன்று முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. ஆஸ்பத்திரி, மருந்து கடை போன்றவற்றிற்கு செல்வதற்காக வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். விதியை மீறி கடைகளை திறக்கக்கூடாது. ஆஸ்பத்திரி, மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்களாக இருந்தால் அவர்களது கையில் திருமண அழைப்பிதழ் வைத்திருக்க வேண்டும். ெரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்திற்கு செல்வோர் அதற்கான டிக்கெட்டுகளை வைத்திருக்க வேண்டும். ஊரடங்கை மீறுபவர்கள் மீது கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story