சிவன் கோவிலில் சனிப்பிரதோஷம்


சிவன் கோவிலில் சனிப்பிரதோஷம்
x

சிவன் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூரில் பிரதோஷத்திற்கு புகழ்பெற்ற விமலசங்கரி உடனுறை விருத்தாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் வெங்கனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story