விரார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் கணவர் பலியான அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்


விரார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் கணவர் பலியான அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 25 April 2021 9:38 AM IST (Updated: 25 April 2021 9:38 AM IST)
t-max-icont-min-icon

விரார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் கணவர் பலியான அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.

மும்பை, 

மும்பையை அடுத்த வசாய் மேற்கு பகுதியை சேர்ந்தவர் வியாபாரி குமார் தோஷி (வயது45). சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக விராரில் உள்ள விஜய் வல்லப் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் குமார் தோஷி உள்பட 14 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தநிலையில் குமார் தோஷியின் மரணம் குறித்து அறிகுறி இல்லாத தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது மனைவி சந்தானிக்கு (42) மதியம் வேளையில் தான் கூறப்பட்டது. கணவரின் மரணம் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் வசாய் பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்த தம்பதிக்கு 14 வயதில் மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story