அனைவரும் தடுப்பூசிபோட விழிப்புணர்வு பிரசாரம் அரசு செயலாளர் வல்லவன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
அனைவரும் தடுப்பூசி போட விழிப்புணர்வு பிரசாரம் செய்வது என்று அரசு செயலாளர் வல்லவன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி முகாமினை விழிப்புணர்வு பிரசாரம் செய்து கொரோனா தொற்றை தடுப்பதற்காக தொடர்பு அதிகாரியாக உள்ளாட்சித்துறை செயலாளர் வல்லவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் தொழிலாளர் துறை உதவி இயக்குனர் (பயிற்சி) சரவணன் மற்றும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், கல்வித்துறை, கிராமப்புற மேம்பாட்டு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், தொழிற்சாலை ஆய்வாளர்கள், சிறு மற்றும் பெரு வணிக நிறுவனங்களின் பல்வேறு சங்க பிரதிநிதிகள் என்.எஸ்.எஸ். மற்றும் நேரு யுவகேந்திரா அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கொரோனா தடுப்பதற்கான பின்வரும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக,
* கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள்.
*தடுப்பூசிகளை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் மூலம் மக்களுக்கு எடுத்து செல்வது.
*தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்.
*மகளிர் சுய உதவி குழுக்கள், ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏதுவாக செய்யக் கூடிய பிரசாரம் செய்வது. மேற்கண்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Related Tags :
Next Story