செய்யாறு அருகே மது குடிக்க பணம் தராதால் மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற தொழிலாளி. தானும் தீக்குளித்து உயிரை மாய்த்தார்


செய்யாறு அருகே மது குடிக்க பணம் தராதால் மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற தொழிலாளி. தானும் தீக்குளித்து உயிரை மாய்த்தார்
x
தினத்தந்தி 25 April 2021 6:04 PM IST (Updated: 25 April 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே மது குடிப்பதற்கு பணம் தராத ஆத்திரத்தில் மண்எண்ணெய்யை மனைவி மீது ஊற்றி, அவரை உயிரோடு எரித்துக்கொன்ற கணவர் தானும் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

செய்யாறு

எரித்துக்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா முளகிரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 55). இவரின் மனைவி பார்வதி (50). கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். சங்கருக்கு குடி பழக்கம் உண்டு. அவர், தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு மனைவியிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி, பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடைேய தகராறு ஏற்பட்டது. 
ஆத்திரம் அடைந்த சங்கர் திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து மனைவி மீது ஊற்றினார். அடுத்த வினாடியை தீயை பற்ற வைத்து விட்டார்.

இதனால் உடலில் பற்றி எரிந்த தீயுடன் பார்வதி அலறியவாறு வீட்டுக்குள்ளேேய ஓடினார். அதற்குள் தீ உடல் முழுவதும் கருகியதால் பார்வதி சரிந்து விழுந்தார். அந்த இடத்திலேயே அவர் இறந்து விட்டார்.
மனைவியை துடிக்க துடிக்க கொன்று விட்டதால் ேவதனை அடைந்த சங்கர் மீதமிருந்த மண்எண்ணெய்யை தன் மீதும் ஊற்றி த வைத்துக்கொண்டார்.

எரியும் தீயுடன் ஓடினார்

வலிதாங்க முடியாமல் அலறி துடித்த சங்கர் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைப்பதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள குட்டைக்கு ஓடினார். எரியும் தீயுடன் ஓடிய சங்கரை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடி வந்து சங்கர் மீது எரிந்த தீயை அணைத்து செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக இறந்தார். அனக்காவூர் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியை உயிரோடு எரித்துக்கொன்று விட்டு சங்கர் தீக்குளித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story