வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 337 பேருக்கு கொரோனா


வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 337 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 April 2021 6:51 PM IST (Updated: 25 April 2021 6:51 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 337 பேருக்கு கொரோனா

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 367 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையின் முடிவில் மேலும் 337 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில், 20-க்கும் மேற்பட்டோர் வேலூரில் தங்கி சிகிச்சை பெறும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். 

வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். 337 பேரும் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக வேலூர் அரசமரப்பேட்டை ஜி.சி.எம். தெரு இரும்பு தகரத்தால் அடைக்கப்பட்டது.

தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முககவசம் அணிந்து, கிருமிநாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து அரசின் விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story