ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மீது தாக்குதல்


ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 25 April 2021 7:00 PM IST (Updated: 25 April 2021 7:00 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள உடைச்சியார்வலசை தெற்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் கழுங்கடியான் (வயது71). கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும்  தினேஷ் என்பவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் தினேஷ் கழுங்கடியானை கல்லால் தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராம நாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை தேடி வருகின்றனர்.

Next Story