சோதனை சாவடி செயல்பாட்டிற்கு வருமா


சோதனை  சாவடி  செயல்பாட்டிற்கு  வருமா
x
தினத்தந்தி 25 April 2021 7:01 PM IST (Updated: 25 April 2021 7:01 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர்திண்டுக்கல் மாவட்ட எல்லையான கடத்தூர் சோதனை சாவடி பயன்பாட்டிற்கு வருமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மடத்துக்குளம்
திருப்பூர்திண்டுக்கல் மாவட்ட எல்லையான கடத்தூர் சோதனை சாவடி பயன்பாட்டிற்கு வருமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 
சோதனை சாவடி
மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூர் பகுதியில், திண்டுக்கல் மாவட்ட எல்லைப்பகுதியான குருவன்வலசு கிராமமும் திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான கடத்தூர் கிராமமும் இணைந்துள்ளது. இந்த இரு மாவட்ட எல்லை பகுதியில் கணியூர் போலீசார் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டது. இந்த சோதனை சாவடியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர். 
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
 கடந்த வருடம் கொரோனா கால கட்டங்களில் நடைமுறையில் இருந்த முழுநேர ஊரடங்கு சமயத்தில் இந்த சோதனை சாவடி கணியூர் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அதன்பின்னர் கடந்த சில மாதங்களாக சோதனை சாவடி செயல்பாட்டில் இல்லை. இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் பழைய ராஜவாய்க்கால் பகுதியில் உள்ள மணலை, டயர் மாட்டுவண்டிகளில் ஏற்றி சட்டவிரோதமாக கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
மேலும் கடத்தூர் சோதனை சாவடி வழியே பல்வேறு வெளிமாவட்ட நபர்கள் பலரும், கார் மற்றும் இதர வாகனங்களில் இரவு நேரங்களில் பல்வேறு பொருட்களை சட்டவிரோதமாக எடுத்து செல்கின்றனர். எனவே திண்டுக்கல்-திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான கடத்தூர் சோதனை சாவடியை பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story