பழனியில் வெறிச்சோடிய சாலைகள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்ைகயொட்டி பழனி நகரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
பழனி:
முழு ஊரடங்கு
கொரோனா பரவல் அதிகம் உள்ளதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் கூடுவதை தவிர்த்து கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படும்.
அதே நேரத்தில் மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் அது தொடர்பான கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அங்கு மக்கள் போதிய இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று முன்தினம் மளிகை கடைகள், காய்கறி கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர்.
நேற்று பழனி பகுதியில் முழு ஊரடங்கு முறையாக பின்பற்றப்பட்டது.
வாகன போக்குவரத்துக்கு தடை, மக்கள் அனாவசியமாக வெளியில் வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டால் பழனி நகரின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
குறிப்பாக அடிவாரம் பகுதியானது மக்கள் நடமாட்டமே இல்லாததால் மயான அமைதி நிலவியது.
போலீஸ் ரோந்து
அதேபோல் திண்டுக்கல் சாலை, உடுமலை சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி காணப்பட்டது.
சாலையில் தேவையில்லாமல் சுற்றுபவர்களை கண்காணிக்க ஆங்காங்கே போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் மருந்து வாங்க மருந்துக்கடைக்கு வந்தோம் என்று கூறினர்.
எனினும் தேவையில்லாமல் ஊரடங்கில் வெளியே சுற்றி திரிய வேண்டாம் என்று அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story