கோவில் கும்பாபிஷேகம்


கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 25 April 2021 8:10 PM IST (Updated: 25 April 2021 8:10 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

பரமக்குடி, 
பரமக்குடி அருகே உலகநாதபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ உலக மரத்தாள் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கொரோனா கட்டுப் பாடுகளுடன் நடந்தது. அதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி பசிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் அடங்கிய குடங்களை தலையில் சுமந்து வந்து கோவில் கலசத்தில் புனித நீரை ஊற்றினர். பின்பு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Next Story