அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்


அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 25 April 2021 8:16 PM IST (Updated: 25 April 2021 8:16 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பூங்குளத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.  பின்னர் கடம் புறம்பாடகி கோவிலை வலம் வந்து மூலவர் மற்றும் ராஜகோபுரம் கலசத்திற்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்த புனித நீரால் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் முதுகுளத்தூரை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாட்டினை ஏனாதி, பூங்குளம், தேவர்புரம் ஆகிய கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story