திருச்செந்தூரில் கோவில் வளாகம், கடற்கரை வெறிச்சோடியது


திருச்செந்தூரில் கோவில் வளாகம், கடற்கரை வெறிச்சோடியது
x
தினத்தந்தி 25 April 2021 9:27 PM IST (Updated: 25 April 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் கோவில் வளாகம், கடற்கரை ஆகியவை வெறிச்சோடி கிடந்தன.

திருச்செந்தூர்:
முழு நேர ஊரடங்கால் நேற்று திருச்செந்தூர் கோவில் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. 
கொரோனா 2வது அலை
தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவியதை தொடர்ந்து பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுகிழமை(நேற்று) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 
இதனால் திருச்செந்தூர் நகரில் பஸ் நிலையம்,  காமராஜர் சாலை, வடக்கு ரதவீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஆள்நடமாட்டம் இன்றி அமைதியாக காணப்பட்டது.
வெறிச்சோடியது 
கோவில் வளாகம், நாழிகிணறு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடியது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடமாடி வந்த கோவில் சுற்றுவட்டாரம் மற்றும் கோவில் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் நகரத்தில் அமைதியான சூழல் நிலவியது.
எளிமையாக நடந்த
திருமணங்கள்
மேலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நேற்று  முகூர்த்த நாள் என்பதால், தமிழக அரசு உத்தரவுக்கு முன்னதாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மட்டும் குறைவான எண்ணிக்கையிலான உறவினர்கள், நண்பர்களுடன் நடந்தது. அதேபோல், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடத்த நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்,  அவரவர்களின் சொந்த ஊர்களில் நடந்தது.
திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில் பகுதியில் ஓரிரு திருமணங்கள் உறவினர்கள் இல்லாமல் நடந்தது. 10-க்கும் குறைவான திருமணங்கள் மட்டுமே நடந்தது.
போலீசார் பாதுகாப்பு
திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் நகர் பகுதி மற்றும் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

Next Story