மேம்பால பணிகள் நிறுத்தம்
ஊரடங்கு காரணமாக மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டன.
கோவை
முழு ஊரடங்கையொட்டி கோவை-மேட்டுப்பாளையம் ரோடு, உக்கடம்- ஆத்துப்பாலம் ரோடு, அவினாசி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டன.
அதுபோன்று கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.950 கோடியில் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதுடன். மாதிரி சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய முழு ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணி முற்றிலும் பாதிக்கப் பட்டது.
இதன்பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மேம்பால பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.முழு ஊரடங்கு காரணமாக இந்த திட்ட பணிகள் அனைத்தும் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஒருநாள் வேலை இழப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, முழு ஊரடங்கின்போது வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி அளிக்கலாம். அப்போது போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படும் என்பதால், பணிகளும் வேகமாக நடைபெறும் என்றனர்.
Related Tags :
Next Story