காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது


காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 April 2021 11:10 PM IST (Updated: 25 April 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

நாட்டுவெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைதானார்கள். 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

காரமடை

நாட்டுவெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைதானார்கள். 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

காட்டுப்பன்றி வேட்டை 

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட தோலாம் பாளையம் பகுதியில் உள்ள காளம்பாளையம் குழிக்காடு பகுதி யில் பன்றியை வேட்டையாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அதிகாரி செல்வராஜூக்கு தகவல் கிடைத்தது. 

உடனே அவருடைய தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு நாட்டுவெடிக்குண்டு (அவுட்டுக்காய்) வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய திருமூர்த்தி (வயது 26), மாரிச்சாமி (25) ஆகியோரை வனத்துறையினர் பிடித்தனர். 

தலா ரூ.3 ஆயிரம் அபராதம் 

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், வேட்டையாடிய காட்டுப்பன்றியை 2 பேரும் சேர்ந்து தங்களின் உறவினர்களான குமார் (37), வெள்ளியங்கிரி (37), பிரசாந்த் (22), வேலுச்சாமி (50), மூர்த்தி (45), அரவிந்தகுமார் (19), கதிர்வேல் (22), கோபால் (21) ஆகிய 8 பேருக்கு கொடுத்தனர். அவர்கள் அந்த பன்றியை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. 

இதையடுத்து வனத்துறையினர் காட்டுப்பன்றியை வேட்டை யாடிய திருமூர்த்தி, மாரிச்சாமி ஆகியோருக்கு தலா ரூ.12,500, மீதமுள்ள 8 பேருக்கும் தலா 3 ஆயிரம் அபராததும் விதித்தனர். 

2 பேர் கைது 

மேலும் திருமூர்த்தி, மாரிச்சாமி ஆகியோர் நாட்டுவெடிகுண்டு மூலம் காட்டுப்பன்றியை வேட்டையாடியதால், அவர் மீது வெடிமருந்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் காரமடை போலீசில் ஒப்படைத்தனர். 

அதன்பேரில் போலீசார் 2 பேர் மீதும் வெடிமருந்து சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, நாட்டுவெடிகுண்டு பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடினால் கைது நடவடிக்கை தொடரும் என்றனர்.


Next Story