193 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மேலும் 2 பேர் பலியாகினர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மேலும் 2 பேர் பலியாகினர்.
193 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் மேலும் 193 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 18,758 ஆக உயர்ந்துள்ளது.
17,363 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,136 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் 1,624 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 174 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இம்மாவட்டத்தை சேர்ந்த 19 பேர் பிற மாவட்டங்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன் எச்சரிக்கை
விருதுநகரில் பாண்டியன் நகர், என்.ஜி.ஓ.காலனி, கம்பர்தெரு, கவிக்குயில் தெரு, லட்சுமி நகர், சின்ன பள்ளிவாசல்தெரு, வைத்தியன் பொன்னப்பன் சந்து, அகமதுநகர், விக்னேஷ்காலனி, அல்லம்பட்டி, சூலக்கரை, மீசலூர், ரோசல்பட்டி, ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தவிர சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி, பாலையம்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நோய் பாதிப்பு பரவலாக உள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை இது பற்றிய அறிவிப்பினை வெளிப்படைத்தன்மையுடன் மாவட்ட நிர்வாகம் மூலம் வெளியிட்டால்தான் பாதித்த பகுதிகளில் மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வாய்ப்பு ஏற்படும்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story