முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் மாவட்ட மக்கள் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
விருதுநகர்,
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் மாவட்ட மக்கள் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
முழு ஊரடங்கு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு நேற்று முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் மாவட்டத்தில் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து வரும் ஆம்னி பஸ்களும் நேற்று இயக்கப்படவில்லை. உணவு பொருள் கொண்டு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற லாரிகள் இயக்கப்படவில்லை.
மருத்துவ ேதவை
ஆட்டோ மற்றும் வேன்கள் நிலையங்களிலேயே முடங்கின. பெட்ரோல் பங்குகள் மட்டும் செயல்பட்டாலும் அங்கு மிக குறைந்த அளவே வாகனங்கள் அத்தியாவசிய தேவைக்காக பெட்ரோல் போடுவதற்காக வரும்நிலை இருந்தது.
ஆஸ்பத்திரி, ஸ்கேன் சென்டர் போன்ற மருத்துவ தேவைக்காக செல்லும் பொதுமக்கள் மட்டுமே வாகனங்களில் செல்லும் நிலை இருந்தது.
ெரயில் போக்குவரத்து
ெரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்ததால் நேற்று சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான அனைத்து ெரயில்களும் வழக்கம் போல் வந்து சென்றன. ஆனாலும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது.
ெரயில் நிலையமும் வெறிச்சோடி காணப்பட்டது. ெரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் செயல்படவில்லை.
வழிபாட்டுத்தலங்கள்
வழிபாட்டுத்தலங்களில் நேற்று பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் வழக்கம்போல் பூஜைகள் நடைபெற்றன.
பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகைக்கு அனுமதி இல்லாத நிலை இருந்தது. இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் வீடுகளிலேயே ரம்ஜான் தொழுகை செய்யும் நிலை இருந்தது. தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு வழிபாடு நேற்று முன்தினமே நடைபெற்று விட்டது.
ஒத்துழைப்பு
மொத்தத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் அரசு அறிவித்திருந்த முழுஊரடங்கிற்கு நோய் பாதிப்பை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழுஒத்துழைப்பு அளித்தனர்.
ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விதிமுறைப்படி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் தெருக்களில் சுற்றிதிரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். பிரதான சாலைகளும், பஸ்நிலையங்களும் வெறிச்சோடிக் கிடந்தன.
அமைதி நிலவியது
கடந்த காலங்களில் ஊரடங்கு காலத்தில் சிறு டீக்கடைகள், பெட்டிக்கடைகள் திறக்கப்படுவதுண்டு. ஆனால் நேற்று டீக்கடைகள், பெட்டிக்கடைகளும் மூடப்பட்டிருந்தன.
விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி, திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஆலங்குளம், தாயில்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் முழுஊரடங்கால் அமைதி நிலவியது.
அருப்புக்கோட்டையில் நேற்று முழு ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி கடையில் இறைச்சி வியாபாரம் செய்த கோழிகள், எடை போடும் எந்திரம் ஆகியவற்றை டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story