சென்னை சென்ற பஸ்சில் பணத்தை தவறவிட்ட கோவில் காவலாளி சமயபுரம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்


சென்னை சென்ற பஸ்சில் பணத்தை தவறவிட்ட கோவில் காவலாளி சமயபுரம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 26 April 2021 1:45 AM IST (Updated: 26 April 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்ற பஸ்சில் கோவில் காவலாளி தவற விடட பணத்தை சமயபுரம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

சமயபுரம்,
நேபாள நாட்டை சேர்ந்த யுவராஜ் (வயது 29) என்பவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் நேபாளம் செல்வதற்காக சமயபுரம் சுங்கச்சாவடியில் இருந்து சென்னைசெல்லும் பஸ்சில் ஏறினார். பஸ், சென்னை சென்ற உடன் நேபாளம் செல்வதற்காக உத்தரப்பிரதேசம் செல்லும் ரெயிலில் ஏறியபோது தான், தான் கொண்டுவந்த பணம் மற்றும் உடைமைகளை பஸ்சில் தவறவிட்டது யுவராஜுக்கு நினைவிற்கு வந்தது. இதைத்தொடர்ந்து, சமயபுரத்தில் இருந்த தனது தந்தை மூலம் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சமயபுரம் சுங்கச்சாவடியில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், யுவராஜ் பயணம்செய்த பஸ் சென்னை அண்ணாநகரில் இருப்பதும், அந்தபஸ்சில் யுவராஜின் உடைமைகள் இருந்ததும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவர்களை தொடர்பு கொண்டு பணம் மற்றும் உடைமைகளை அடுத்த பஸ்சில் சமயபுரத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் உடைமைகளை பெற்று யுவராஜின் தந்தை புஷ்பராஜிடம் நேற்று ஒப்படைத்தனர். துரித நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சமயபுரம் போலீசாரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

Next Story