ரெயில் நிலையத்தில் காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள்
ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் காத்திருந்தனர்.
திருச்சி,
கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனா். முழு ஊரடங்கு நாளான நேற்று திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் உடைமைகளுடன் படுத்து இருந்தனர். இதேபோல் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் ஒடிசா செல்வதற்காக அந்த மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் ரெயில் நிலையத்தில் காத்து இருந்தனர். மேலும், அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சேமித்து வைத்து இருந்தனர்.
Related Tags :
Next Story