சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சாவு
சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்தார்.
விராலிமலை
விராலிமலை தாலுகா கொடும்பாளூரைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி புவனேஸ்வரி (வயது 54). இவர் கடந்த 22-ந் தேதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த துறையூரை சேர்ந்த சல்மான்கான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக தங்கராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த புவனேஸ்வரி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Related Tags :
Next Story