மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு
நெல்லையில் மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
நெல்லை, ஏப்:
நெல்லை தச்சநல்லூர் கிராம சாவடி தெருவைச் சேர்ந்தவர் வேல் (வயது 68). இவர் சம்பவத்தன்று வீட்டின் மாடியில் உறவினரின் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து குழந்தையுடன் வேல் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த வேலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்தரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதில் அதிர்ஷ்டவசமாக குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story