மேலும் ஒரு நிதி நிறுவனத்தில் மோசடி
மேலும் ஒரு நிதி நிறுவனத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை கிளை மேலாளர் உள்பட 3 ஊழியர்கள் சேர்ந்து திருடி மற்றொரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டதோடு நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன. இந்தநிலையில் கைதானவர்கள் நகைகளை அடகு வைத்த தனியார் நிறுவனம் தரப்பில் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தங்களது நிறுவனத்தில் ரூ.1 கோடி வரை மோசடி நடந்துள்ளதாகவும், கைதான மேலாளர் மாரிமுத்து உள்பட 3 ஊழியர்கள் மீது புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story