முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல், மாவிளக்கு பூஜை


முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல், மாவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 26 April 2021 2:42 AM IST (Updated: 26 April 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல், மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டி ஊராட்சி சாஸ்திரிபுரம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல், மாவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி முத்துமாரியம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவில் சிம்ம வாகனத்தில் முத்துமாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவில் சாஸ்திரிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story