தென்காசி மாவட்டத்தில் 261 பேருக்கு கொரோனா


தென்காசி மாவட்டத்தில் 261 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 April 2021 3:02 AM IST (Updated: 26 April 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 261 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 261 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 912 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றும் 112 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயது பெண் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கடந்த 19-ந் தேதி தென்காசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உடல்நலம் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இவருடன் சேர்ந்து தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 172 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story