முககவசம் அணியாதவர்களை வாகனத்தில் ஏற்றிச்சென்ற மாநகராட்சி குழுவினர்


முககவசம் அணியாதவர்களை வாகனத்தில் ஏற்றிச்சென்ற மாநகராட்சி குழுவினர்
x
தினத்தந்தி 26 April 2021 3:46 AM IST (Updated: 26 April 2021 3:46 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் முககவசம் அணியாமல் வீதியில் சென்றவர்களை, மாநகராட்சி குழுவினர் வாகனத்தில் ஏற்றி சென்றனர். விட்டு விடும்படி கெஞ்சியதால் அவர்களை இறக்கி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்
திருப்பூர் மாநகரில் முககவசம் அணியாமல் வீதியில் சென்றவர்களை, மாநகராட்சி  குழுவினர் வாகனத்தில் ஏற்றி சென்றனர். விட்டு விடும்படி கெஞ்சியதால் அவர்களை இறக்கி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
குழுவினர் கண்காணிப்பு
திருப்பூர் மாநகர பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களுக்கு வரும் அனைவரும் முககவசம் அணிய வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் முககவசம் அணியாமல் வீதியில் சுற்றித்திரிபவர்களை கண்டறியும் வகையில் மண்டலத்துக்கு ஒரு குழு வீதம் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநகரம் முழுவதும் கண்காணிக்கப்பட்டது. அதுபோல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநகர பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாநகர பகுதிகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதிலும் முககவசம் அணியாமல் சென்றவர்களை குழுவினர் பிடித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். திருப்பூர் கோர்ட்டு வீதியில் முககவசம் அணியாமல் சென்ற 3 பேரை, வாகனத்தில் வந்த மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர் பிடித்து வாகனத்தில் ஏற்றி சிறிது தூரம் சென்றனர். இதனால் 3 பேரும் அலறினார்கள். தங்களை விட்டுவிடும்படி அதிகாரிகளிடம் கெஞ்சினார்கள். பின்னர் அவர்களை இறக்கி விட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாநகரம் முழுவதும் நேற்று மேற்கொண்ட ஆய்வில் அபராத நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இறைச்சி கடைகள்
அதுபோல் மகாவீர் ஜெயந்தியையொட்டி நேற்று மீன், இறைச்சிக்கடைகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டது. விதிமுறை மீறி கடைகள் செயல்பட்டதா? என்று அதிகாரிகள் கண்காணித்தனர். ஆனால் அவ்வாறு கடைகள் செயல்படவில்லை என்று மாநகர் நல அதிகாரியான பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

Next Story