நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு: சேலத்தில் கொரோனா நோயாளிகளால் நிரம்பும் ஆஸ்பத்திரிகள்


நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு: சேலத்தில் கொரோனா நோயாளிகளால் நிரம்பும் ஆஸ்பத்திரிகள்
x
தினத்தந்தி 26 April 2021 4:14 AM IST (Updated: 26 April 2021 4:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளால் நிரம்பும் ஆஸ்பத்திரிகள்

சேலம்:
சேலத்தில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா நோயாளிகளால் ஆஸ்பத்திரிகள் நிரம்புகின்றன.
கொரோனா அலை
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தினமும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது. குறிப்பாக 511 பேர் நோய் தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களால் அரசு ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நிரம்பும் மருத்துவமனைகள்
இதுதவிர, கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லூரி (சித்தா), கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் ஆத்தூர், மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாநகரில் தொங்கும் பூங்கா திருமண மண்டபத்தில் 400 படுக்கைகளுடன் சிசிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. 
இருப்பினும், கொரோனா பாதிப்பால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவதால் கொரோனா சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதல் சிறப்பு மையங்கள் ஏற்படுத்த மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story