திம்மனமுத்தூர் ஆரம்பப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ரோட்டில் வழங்கப்படும் சத்துணவு பொருட்கள்
மாணவ-மாணவிகளுக்கு ரோட்டில் வழங்கப்படும் சத்துணவு பொருட்கள்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா திம்மனமுத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு அரசு சார்பில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் அங்கு படிக்கும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு சமைத்து சாப்பிட அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப் படுகிறது.
தற்போது சத்துணவு கூடம் மூடப்பட்டு உள்ளதால் மாணவ- மாணவிகளுக்கு தெருவில் வைத்தே இந்த பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் மாணவ- மாணவிகள் தெருவில் நின்றபடியே வாங்கிச் செல்லும் அவல நிலை உள்ளது.
இது குறித்து சத்துணவு துணைவட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு சத்துணவு பொருட்கள் வைக்கும் அறை பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளதாக கூறினார். எது எப்படி இருந்தாலும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பள்ளி அறைக்குள் வைத்து அரிசி பருப்பு மற்றும் முட்டைகளை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story