கொரோனா பாதுகாப்பு குறித்து தலை கீழாக தொங்கி யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக சேவகர்
கொரோனா பாதுகாப்பு குறித்து தலை கீழாக தொங்கி யோகா செய்து விழிப்புணர்வு
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து யோகா மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நேரு யுவ கேந்திரா இளைஞர் நல ஒருங்கிணைப்பாளர் தலைமை தாங்கினார். இதில் சமூக சேவகர் தங்கவேலு (வயது 61) தனது கால்களில் கயிறு கட்டி அதன் மூலம் தலை கீழாகத் தொங்கி சிரஸாசனம் செய்தார்.
அதைத்தொடர்ந்து அவர் 16 நிமிடங்கள் தொங்கியபடி யோகா செய்து சாதனை செய்தார். மேலும் அவர், முகக்கவசம் அணிவது, கையுறை அணிவது, கபசுர குடிநீர் குடிப்பது போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார். முன்னதாக, நிகழ்ச்சியை முன்னாள் மாவட்ட நீதிபதி கிருபாநிதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story