ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ்2 மாணவர் பலி
ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ்2 மாணவர் பலியானார்.
ஏரல்:
ஏரலில், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக பலியானார்.
பிளஸ்-2 மாணவர்
தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் திருமணி இவரது மகன் பரத்ஹரிஷ் (வயது 16). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று இவரது நண்பர்களுடன் பரத்ஹரிஷ் ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்துள்ளார். ஏரல் ஆற்றுபாலத்திற்கு மேல் பக்கம் நண்பர்கள் 4 பேருடன் அவர் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.
தண்ணீரில் மூழ்கினார்
அப்போது பரத்ஹரிஷ் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அதிர்ச்சி அடைந்த. நண்பர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக கரைக்கு திரும்பிய அவர்கள், பரத்ஹரிஷ் தந்தை திருமணிக்கு தகவல் தெரிவித்தனர். அவர், ஏரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடல் மீட்பு
போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெபினா உடனடியாக ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று தாமிரபரணி ஆற்றில் தேடினர். நீண்டநேர தேடுதலுக்கு பின்னர் பரத் ஹரிஷ் உடலை தண்ணீரில் இருந்து கரைக்கு தீயணைப்புத்துறையினர் தூக்கி வந்தனர். அவரது உடலை ஏரல் போலீசார் கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story