தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2021 8:27 PM IST (Updated: 26 April 2021 8:27 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையத்தில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் : 
திண்டுக்கல் மாவட்டம்  கள்ளிமந்தையத்தில் கலப்புத் திருமணங்களை பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரை கண்டித்து தமிழ் புலிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சின்னக்கருப்பன் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் சார் பதிவாளரை கண்டித்து கோஷமிட்டனர். இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் மணி, மண்டலச்செயலாளர் மருதை திருவாணன், மாவட்ட துணைச் செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story