அரசு வழிமுறைகளுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பல்வேறு அமைப்பினர், சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
அரசு வழிமுறைகளுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பல்வேறு அமைப்பினர், சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
திருப்பூர்
அரசு வழிமுறைகளுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பல்வேறு அமைப்பினர், சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
சலூன் கடைகளை திறக்க
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், ஆதி மருத்துவர் இயக்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவல் காரணமாக அழகு நிலையங்கள் மற்றும் சலூன்களை மூட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். வாடகை கட்டிடத்தில் கடை நடக்கும் பட்சத்தில் முழு நேர கடை திறக்கும் வரை வாடகை ரத்து செய்ய வேண்டும். கடைகளின் மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அரசு வழிமுறைகளுடன் கடை திறக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
நிவாரண தொகை
இதுபோல் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சலூன்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது ஒட்டுமொத்த தொழிலாளர்களை வேதனையடைய செய்துள்ளது. இந்த தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மீது அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்ற சலூன்களை திறக்க தயாராக உள்ளோம். இந்நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும். என்று கூறியிருந்தனர்.
மேலும், தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்க திருப்பூர் மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கொரோனா பரவல் காரணமாக சலூன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து மீள முடியாமல் தவித்து வருகிறோம். கடந்த ஆண்டு அரசு அறிவித்த நிவாரணத்தொகை இன்னும் கிடைக்கவில்லை. எனவே தினமும் அரைநாள் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும். என்றிருந்தனர்.
Related Tags :
Next Story