இந்த மாத இறுதியில் மராட்டியத்துக்கு 4.35 லட்சம் ரெம்டெசிவிர் கிடைக்கும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்
இந்த மாத இறுதியில் மராட்டியத்துக்கு 4.35 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
நாடு முழுவதும் 2-வது கொரோனா அலை காரணமாக ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசு மாநிலங்களுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை வழங்கி வருகிறது. இதில் மராட்டியத்துக்கு ஏப்ரல் 21 முதல் 30 வரையிலான 10 நாட்களுக்கு 2.69 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து தரப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் இதை அதிகரித்து தரவேண்டும் என மராட்டிய அரசு கோரிக்கை விடுத்து இருந்தது. இதில் மத்திய அரசு மாநிலத்துக்கு இந்த மாத இறுதியில் கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளை தர உள்ளதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘தற்போது மாநில அரசு தருவதாக இருந்த ரெம்டெசிவிர் 2.69 லட்சத்தில் இருந்து 4.35 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது’’ என்றார். மேலும் அவர் மாநில அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூறியுள்ளார். மத்திய அரசு மாநிலங்களுக்கு மொத்தமாக வழங்க உள்ள 16 லட்சம் ரெம்டெசிவிரில் 4.35 லட்சத்தை மராட்டியத்திற்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்-மந்திரி பேசினார்.
இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 22 நோயாளிகள் உயிரிழந்த நாசிக் டாக்டர் சாகிர் உசேன் ஆஸ்பத்திரி ஊழியர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர், விபத்தால் மனம் தளராமல் தொடர்ந்து நோயாளிகளுக்கு சேவை ஆற்ற ஊழியர்களை உற்சாகப்படுத்தினார்.
இதேபோல நாசில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தீத்தடுப்பு, மின்சார, கட்டிட ஆய்வு செய்ய மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story