தாராபுரம் அருகே தனியாா் காற்றாலை உயா்மின் கோபுர பணிகளை நிறுத்தி வைக்கக்கோரி தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தாராபுரம் அருகே தனியாா் காற்றாலை உயா்மின் கோபுர பணிகளை  நிறுத்தி வைக்கக்கோரி தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தினத்தந்தி 26 April 2021 9:19 PM IST (Updated: 26 April 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே தனியாா் காற்றாலை உயா்மின் கோபுர பணிகளை நிறுத்தி வைக்கக்கோரி தாராபுரம் சப்கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டடம்
தாராபுரம் அருகே தனியாா் காற்றாலை உயா்மின் கோபுர பணிகளை  நிறுத்தி வைக்கக்கோரி தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கணேச மூர்த்தி எம்.பி.,பங்கேற்றார். 
காற்றாலை
தாராபுரம் பகுதியில் சுஸ்லான்  தனியாா் காற்றாலை நிறுவனம் போலீஸ் பாதுகாப்புடன் உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை செய்து வருகிறது. இந்த பணிகள் மாவட்ட நிா்வாகத்தின் தரப்பில் உயா்நீதிமன்ற உத்தரவுபடி நடந்துவருகிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனா். அந்த மேல்முறையிடு முடியும்வரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சி சாா்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில்
அறிவிக்கப்பட்டு இருந்தது. 
அதனை அறிந்த தாராபுரம் சப்-கலெக்டா் விவசாயிகளை பேச்சுவாா்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்தாா். அதைத் தொடா்ந்து ஈரோடு பாராளுமன்ற தொகுதி கணேசமூா்த்தி எம்.பி., தலைமையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கதலைவா் ஈசன், உழவா் உழைப்பாளா் கட்சியின் திருப்பூா் மாவட்ட தலைவா்ஈஸ்வரமூா்த்தி, நாம் தமிழா் கட்சியின் மாவட்ட தலைவா் சுரேஷ், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ரகுபதி உட்பட சிலா் மட்டும் தாராபுரம்   சப்-கலெக்டா் பவன்குமாரை சந்தித்து மனுகொடுத்தனர். 
காத்திருப்பு போராட்டம்
 அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாராபுரம் பகுதியில் சுஸ்லான் என்னும் தனியாா்காற்றாலை நிறுவன பணிகளை சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீடு முடிவடையும் வரை நிறுத்திவைக்கவேண்டும்.  அறவழியில் போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளா் சிவகுமாா், ஒருங்கிணைப்பாளா் தனபால் ஆகியோரைபொய்வழக்குபோட்டுசிறையில்அடைத்துள்ளனா். அவா்கள் மீதான வழக்கை திரும்ப பெற்று அவா்களை விடுதலைசெய்யவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுஇருந்தது. 
தொடா்ந்து சப்-கலெக்டருடன் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடுஏற்படவில்லை. உடனே எம்.பி. தலைமையில் விவசாயிகள் மற்றும்அனைத்து கட்சியினா் சப்-கலெக்டா் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து தாராபுரம் போலீஸ்துணைசூப்பிரண்டு ஜெயராமன், இன்ஸ்பெக்டா் மகேந்திரன் ஆகியோா் வந்துஅவா்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.அப்போது மின்கோபுரம் அமைக்கும் பணிகளை உடனே நிறுத்தவேண்டும் மேலும் காற்றாலை நிறுவனத்தினா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தைக்கு வரவேண்டும் அப்போதுதான் இங்கிருந்துகலைந்து செல்வோம் என்று கூறினா். பின்னா் தனியாா் காற்றாலைநிா்வாகத்திடம் பேசிய போலீசாா் பணிகளை நிறுத்துமாறு கூறினாா்.
பணிகள் நிறுத்தம்
 அதைத்தொடா்ந்து அவா்கள் விருதுநகா் முதல் திருப்பூா் வரையிலான தமிழ்நாடுமின்தொடரமைப்பு கழகத்தின் திட்டப்பணிகளை நிறுத்திக் கொண்டனா்.மேலும் காற்றாலை நிா்வாகத்தினருடன் நாளை (இன்று) தாலுகா அலுவலகத்தில் வைத்துபேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று போலீசாா் கூறினா். அதைத்தொடா்ந்துவிவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினா் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதில்
தி.மு.க, காங்கிரஸ்,ம.தி.மு.க, அ.ம.மு.க, கொ.ம.தே.க, உழவா் உழைப்பாளா்கட்சி மற்றும் விவசாயிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.இந்த சம்பவத்தால் நேற்று தாராபுரம் சப்-கலெக்டா்அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Next Story