குன்னத்தூர் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு
குன்னத்தூர் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு
குன்னத்தூர்
குன்னத்தூர் சந்தை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரிய சந்தையாகும். இந்த சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும். குன்னத்தூர் பகுதிகளில் காடுகள் அதிகம் இருப்பதால் இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் ஆடு, மாடு அதிகம் வளர்ந்து வருகிறார்கள். குன்னத்தூர் பகுதியில் வளர்க்கப்படும் மாடுகளை இப்பகுதி விவசாயிகள் திங்கட்கிழமை நடைபெறும் குன்னத்தூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதேபோல் குன்னத்தூர் சந்தையில் மாடு வாங்க கோவை, திருப்பூர், ஈரோடு, அந்தியூர், பவானி, கோவை போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் வருவார்கள்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் கொரோனோ கட்டுப்பாட்டில் இருப்பதால் நேற்று நடைபெற்ற குன்னத்தூர் சந்தைக்கு மாடு வரத்து குறைவாகவே இருந்தது.
Related Tags :
Next Story