குடும்ப பிரச்சினையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூரை அருகே குடும்ப பிரச்சினையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு சக்தி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி மஞ்சுளா (வயது 32) என்கின்ற மனைவியும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது
இதைத்தொடர்ந்து, மனமுடைந்து காணப்பட்ட மஞ்சுளா நேற்று முன்தினம் வீட்டில் படுக்கை அறைக்கு சென்று மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை முனுசாமி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மஞ்சுளா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story