வால்பாறையில் சாலை விரிவாக்கத்தின் போது மரங்களுக்கு பாதிப்பு இல்லாமல் பணிகள் செய்ய வேண்டும்
வால்பாறையில் சாலை விரிவாக்கத்தின்போது மரங்களுக்கு பாதிப்பு இல்லாமல் பணிகள் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் சாலை விரிவாக்கத்தின்போது மரங்களுக்கு பாதிப்பு இல்லாமல் பணிகள் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வால்பாறை மலைப்பாதை
வால்பாறை மலைப்பகுதி ஊசிஇலை, மரம், செடி, கொடிகளை உள்ளடக்கிய பசுமை மாற மழைக்காடுகளை கொண்ட தன்மை உடையது. இங்கு இருக்கும் மரங்கள் அனைத்தும் மழை மேகங்கள் உருவாவதற்கு காரணமாக விளங்க கூடியவைகள். இதனால் தான் இங்கு ஆண்டுதோறும் தவறாமல் மழை பெய்து வருகிறது.
இந்த வால்பாறைக்கு வர ஆழியாறு அணை அருகில் இருந்து மலைப்பாதை தொடங்குகிறது. அங்கிருந்து 40 கி.மீ. தூரம் மலைப்பாதையில் இயற்கை அழகை ரசித்தபடி மகிழ்ச்சியுடன் வந்து சேரலாம். இதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் இருவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
விரிவாக்க பணிகள்
இந்த சாலையில் சில இடங்களில் குறுகலாக இருப்பதால் அதை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி பணிகள் தொடங்கி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஆழியாறு அணை முதல் கவர்க்கல் எஸ்டேட் பகுதி வரை பணிகள் முடிந்து விட்டன.
அங்கிருந்து வால்பாறை வரை 15 கி.மீ. தூரம் தற்போது சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியின்போது சில இடங்களில் மரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மரங்கள் பாதிப்பு
சாலை விரிவாக்க பணிகள் மிகவும் நல்லதுதான். ஆனால் அந்த விரிவாக்கத்தின்போது மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. இங்கு விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப் படுவது இல்லை என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பணியின்போது, சாலையோரத்தில் உள்ள மண், லேசான பாறைகளை அப்புறப்படுத்தும்போது மரங்கள் சரிந்து விடுகின்றன. அதன்படி பல மரங்கள் சரிந்து உள்ளன. இங்கு இருக்கும் மரங்கள் அனைத்தும் மழை மேகங்கள் உருவாக காரணமாக இருக்கின்றன.
நடவடிக்கை
இந்த நிலையில் விரிவாக்க பணியின்போது சாலையோர மரங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. சில மரங்களின் வோ்கள் பாதிக்கப்படுவதால், பட்டுப்போய் விடுகிறது. எனவே சாலை விரிவாக்க பணியின்போது மரங்களுக்கு பாதிப்பு இல்லாமல் பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story