திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 9 ஆயிரத்து 300 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 9 ஆயிரத்து 300 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வந்துள்ளது.
x
தினத்தந்தி 26 April 2021 10:16 PM IST (Updated: 26 April 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 9 ஆயிரத்து 300 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வந்துள்ளது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 9 ஆயிரத்து 300 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வந்துள்ளது.
9 ஆயிரத்து 300 டோஸ் 
 கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் நாள் ஒன்றின் பாதிப்பு 400-ஐ நெருங்கியுள்ளது. இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். இதற்கிடையே பலரும் தடுப்பூசி செலுத்தியதால் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டது. 
இதையடுத்து சென்னையில் இருந்து சுகாதாரத்துறை மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 9 ஆயிரத்து 300 டோஸ் ஒதுக்கப்பட்டு நேற்று திருப்பூருக்கு வந்தது.
பிரித்து அனுப்பும் பணி
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
 கோவை மண்டலத்திற்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டத்திற்கு 7 ஆயிரத்து 300 டோஸ் கோவிஷீல்டும், 2 ஆயிரம் டோஸ் கோவேக்சினும் ஒதுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இந்த தடுப்பூசி முடியும் தருவாயில் கூடுதலாக கேட்டு பெறப்படும். அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story