சிறுவன் உள்பட 63 பேருக்கு கொரோனா


சிறுவன் உள்பட 63 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 April 2021 10:19 PM IST (Updated: 26 April 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் சிறுவன் உள்பட 63 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் சிறுவன் உள்பட 63 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று

பொள்ளாச்சி நகரில் ஓம்சாந்தி நகரில் ஒருவருக்கும், ஏ.பி.டி. ரோட்டில் 27 வயது பெண்ணுக்கும், வெங்கடேசா காலனியில் 52 வயது நபருக்கும், ராஜராஜேஸ்வரி நகரில் 44 வயது நபருக்கும், முத்துகவுண்டர் லே-அவுட்டில் 39 வயது நபருக்கும், காந்தி மண்டபம் வீதியில் 20 வயது நபர்.

மார்க்கெட் ரோட்டில் 45 வயது பெண்ணுக்கும், ஆர்.ஆர். தியேட்டர் ரோட்டில் 46 வயது பெண்ணுக்கும், வடுகபாளையத்தில் 48 வயது பெண்ணுக்கும், எல்.ஐ.ஜி. காலனியில் 9 வயது சிறுவனுக்கும், ஜோதி நகர் ஏ காலனியில் 50 வயது நபருக்கும், ஜெயலட்சுமி நகரில் 39 வயது நபருக்கும் சேர்த்து 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் தொப்பம்பட்டி வாய்க்கால் மேட்டில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 3 பேருக்கும், டி.நல்லிகவுண்டன்பாளை யத்தில் உள்ள தனியார் தீவன நிறுவனத்தில் 6 பேருக்கும், பழனியாண்டி புதூரில் 3 பேருக்கும், குள்ளக்காபாளையம், ஆச்சிப்பட்டி, நல்லிகவுண்டன் பாளையம், ஜமீன்முத்தூர், நெகமம் பகுதிகளில் தலா ஒருவருக்கும் சேர்த்து 17 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

தெற்கு ஒன்றியத்தில் ரங்கசமுத்திரத்தில் 2 பேருக்கும், பக்கோதி பாளையத்தில் 2 பேருக்கும், சூளேஸ்வரன்பட்டியில் 4 பேருக்கும், சின்னாம் பாளையத்தில் 3 பேருக்கும், அம்பராம்பாளையத்தில் 2 பேருக்கும், கஞ்சம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கோமங்கலம்புதூர், காளிபாளையம், ஜமீன்ஊத்துக்குளியில் தலா ஒருவருக்கும் சேர்த்து 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

63 பேருக்கு பாதிப்பு

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 4 பேருக்கும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 8 பேருக்கும், வால்பாறை நகராட்சியில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி நகர பகுதிகளில் இதுவரைக்கும் 736 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 

இதில் 560 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது 160 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 16 பேர் உயிரிழந்து உள்ளனர். இதை தொடர்ந்து தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.

 இதற்கிடையில் ஒரே நாளில் 300 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. இதேபோன்று வடக்கு ஒன்றிய பகுதிகளில் 2 தனியார் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. 

இதையடுத்து அந்த நிறுவனங்களை மூடி 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை, வால்பாறை பகுதிகளில் ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கிருமி நாசினி தெளிப்பு 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கிணத்துக்கடவு பஸ்நிலையத்தில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதுபோன்று இங்குள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 


Next Story