பெரியநாயக்கன்பாளையத்தில் மளிகை கடையில் தீ விபத்து
பெரியநாயக்கன்பாளையத்தில் மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இடிகரை
பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகரில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 52). இவர் ரெயில்வே பீடர் சாலையில் மளிகை கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை கண்ணனின் மளிகைக்கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
நீண்ட நேரத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story