கோவையில் ஊரடங்கை பயன்படுத்தி மின்வாரிய ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
கோவையில் ஊரடங்கை பயன்படுத்தி மின்வாரிய ஊழியர் வீட்டில் 40 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கும்பல் அந்த பகுதியில் பல்பொருள் அங்காடியிலும் கைவரிசை காட்டியுள்ளது.
கோவை
கோவையில் ஊரடங்கை பயன்படுத்தி மின்வாரிய ஊழியர் வீட்டில் 40 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கும்பல் அந்த பகுதியில் பல்பொருள் அங்காடியிலும் கைவரிசை காட்டியுள்ளது.
40 பவுன் நகை கொள்ளை
கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 57). இவர் ஒண்டிப்புதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அலுலவராக பணியாற்றி வருகிறார். மாரியப்பன் கடந்த 23-ந் தேதி அவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் அவர் நேற்று காலை கோவைக்கு வந்தார்.
தொடர்ந்து மாரியப்பன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க உடைக்கப்பட்டு கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மாரியப்பன் கோவை சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
பல்பொருள் அங்காடியிலும் கைவரிசை
கோவை பீளமேடு மசக்காளிபாளையம் சாலையில் ஒரு தனியார் பல் பொருள் அங்காடி உள்ளது. முழு ஊரடங்கு என்பதால் நேற்று முன்தினம் கடையை யாரும் திறக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை பல்பொருள் அங்காடி ஊழியர்கள் கடையை திறக்க சென்றனர்.
அப்போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சத்து 84 ஆயிரத்தை காணவில்லை.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்பொருள் அங்காடியில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மா்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story