திருப்பத்தூர் மாவட்டத்தில் 153 பேருக்கு கொரோனா


திருப்பத்தூர் மாவட்டத்தில் 153 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 April 2021 10:49 PM IST (Updated: 26 April 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் 153 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக்கிற்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனடியாக அவர் புதுப்பேட்டை அக்ரகாரம் சித்த மருத்துவ பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

மேலும் 152 பேருக்கு கொரோனாதோற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 76 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

Next Story