க.பரமத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு
க.பரமத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
க.பரமத்தி
8 பவுன் நகைகள் திருட்டு
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே முத்து சோலிபாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி (வயது 36). இவர் கரூரில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 25-ந்தேதி காலை கரூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்தநிலையில் வீட்டில் இருந்த முத்துசாமியின் பெற்றோர் கந்தசாமி-சரஸ்வதி ஆகியோர் வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்று விட்டனர். மதியம் சாப்பிடுவதற்காக கந்தசாமி, சரஸ்வதி ஆகியோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டிற்கு சென்று பீரோவை பார்த்தனர்.
அப்போது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு துணிகள் கலைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 8 பவுன் தங்கநகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
போலீசார் வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில், க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story