பொன்னமராவதி அண்ணாநகரில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை இலுப்பூர் ஆர்.டி.ஓ. விசாரணை


பொன்னமராவதி அண்ணாநகரில்  புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை  இலுப்பூர் ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 27 April 2021 12:14 AM IST (Updated: 27 April 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி அண்ணாநகரில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இலுப்பூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

பொன்னமராவதி:
வாக்குவாதம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அண்ணா நகரில் உள்ள எலக்ட்ரிக்கல்ஸ் கடையில் வேலை பார்த்து வருபவர் மோகன்ராஜ் (வயது 22). இவரும், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மணிமேகலை (23) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 
இந்நிலையில் கடந்த 24-ந் தேதி அண்ணாநகரில் மோகன்ராஜ் தாத்தா இறந்து விட்டார். அந்த இறப்பு காரியத்தின் இறுதி ஊர்வலத்தில் மோகன்ராஜ் குடித்துவிட்டு ஆடியதை மணிமேகலை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மணிமேகலை தனது அறைக்குள் சென்று கதவை அடைத்து தாழிட்டு தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் மணிமேகலை வெளியில் வரவில்லை.
புதுப்பெண் தற்கொலை
இதையடுத்து கதவை தட்டிய போது, கதவை திறக்காததால் சந்தேகம் ஏற்பட்டு கதவினை மோகன்ராஜின் தாய் அஞ்சலை உடைத்து பார்த்தார். அப்போது அங்கு மணிமேகலை தனது துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மணிமேகலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
ஆர்.டி.ஓ. விசாரணை
இதுகுறித்து பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் மணிமேகலையின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஓராண்டு ஆவதால் இலுப்பூர் ஆர்.டி.ஓ. தண்டாயுதபாணி  விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story