ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று
ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
வடகாடு:
வடகாட்டை சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர் தர்ம. தங்கவேல். இவருக்கு கடந்த சில நாட்களாகவே கடும் காய்ச்சல் நிலவியதை அடுத்து, புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொேரானா தொற்று உறுதியானது. இதனையடுத்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது, நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேட்பாளருடைய குடும்ப உறுப்பினர்களாகிய அவரது மனைவி மற்றும் தாய், குழந்தை ஆகியோர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story