முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு


முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு
x
தினத்தந்தி 27 April 2021 12:52 AM IST (Updated: 27 April 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

களக்காட்டில் முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

களக்காடு, ஏப்:
களக்காட்டில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகளும் வழங்கி பாராட்டினர். வணிக வளாகங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்றும் சோதனை நடத்தினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தினசரி தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Next Story