கர்நாடகத்தில் புதிதாக 29,744 பேருக்கு வைரஸ் தொற்று; ஒரே நாளில் கொரோனாவுக்கு 201 பேர் உயிரிழந்தனர்


கர்நாடகத்தில் புதிதாக 29,744 பேருக்கு வைரஸ் தொற்று; ஒரே நாளில் கொரோனாவுக்கு 201 பேர் உயிரிழந்தனர்
x
தினத்தந்தி 27 April 2021 1:26 AM IST (Updated: 27 April 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 201 பேர் உயிரிழந்தனர். புதிதாக 29,744 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 201 பேர் உயிரிழந்தனர். புதிதாக 29,744 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வைரஸ் தொற்று

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 66 ஆயிரத்து 407 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 29,744 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 68 ஆயிரத்து 945 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 201 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 627 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 10,663 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 73 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,492 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 81 ஆயிரத்து 42 ஆக உயர்ந்துள்ளது.

மண்டியாவில் 929 பேர்

பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 16,545 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 418 பேர், பல்லாரியில் 786 பேர், பெலகாவியில் 312 பேர், பெங்களூரு புறநகரில் 505 பேர், பீதரில் 452 பேர், சாம்ராஜ்நகரில் 267 பேர், சிக்பள்ளாப்பூரில் 444 பேர், சிக்கமகளூருவில் 403 பேர், சித்ரதுர்காவில் 104 பேர், தட்சிண கன்னடாவில் 295 பேர், தாவணகெரேயில் 105 பேர், தார்வாரில் 433 பேர், கதக்கில் 97 பேர், ஹாசனில் 747 பேர், ஹாவேரியில் 78 பேர், கலபுரகியில் 872 பேர், குடகில் 311 பேர், கோலாரில் 421 பேர், கொப்பலில் 282 பேர், மண்டியாவில் 929 பேர், மைசூருவில் 1,563 பேர், ராய்ச்சூரில் 609 பேர், ராமநகரில் 168 பேர், சிவமொக்காவில் 250 பேர், துமகூருவில் 1,197 பேர், உடுப்பியில் 412 பேர், உத்தரகன்னடாவில் 190 பேர், விஜயாப்புராவில் 385 பேர், யாதகிரியில் 164 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 105 பேரும், பல்லாரியில் 18 பேரும், ஹாசனில் 10 பேர், மண்டியாவில் 9 பேர், மைசூரு, கலபுரகியில் 7 பேர், தார்வார், கோலார், ராமநகரில் தலா 5 பேர், பீதர், பீதர், ஹாவேரி, துமகூரு, யாதகிரியில் தலா 4 பேர், பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், உத்தரகன்னடாவில் தலா 3 பேர் உள்பட மொத்தம் 203 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் சற்று பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த வைரஸ் தொற்று குறைந்திருப்பது கர்நாடக அரசுக்கும், மக்களுக்கும் சற்று ஆறுதலை அளிப்பதாக உள்ளது.

Next Story