ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஸ்ரீரங்கம், ஏப்.27-
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சகரை பகுதியில் திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தின் பின்புறம் அம்பேத்கர் நகர் உள்ளது. இந்த இடத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் அறிவியல் பூங்காவுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் ஆக்கிரமிப்புகாரணமாக இப்பணி தடைப்பட்டது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் திருஞானம் தலைமையில் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, இளநிலை பொறியாளர்கள் பாலமுருகன், ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story