தாறுமாறாக ஓடிய கார், அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி கவிழ்ந்தது
தென்தாமரைகுளம் அருகே வாகனங்கள், மின்கம்பம் மீது மோதிவிட்டு தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்தது. இ்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்தாமரைகுளம்,
தென்தாமரைகுளம் அருகே வாகனங்கள், மின்கம்பம் மீது மோதிவிட்டு தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்தது. இ்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
தாறுமாறாக ஓடிய கார்
தென்தாமரைகுளம் அருகே சாமிதோப்பில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த கார் காமராஜபுரம் அருகே ரோட்டில் நடந்து சென்ற சாஸ்தான் கோவில் விளையை சேர்ந்த சிவகாமி (வயது 42) என்பவர் மீது மோதிவிட்டு தாறுமாறாக ஓடி சைக்கிள், மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.
இதில் தென்தாமரைகுளத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தேவசதானந்தம் (65) அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த லிங்கம் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மின்கம்பம் சேதம்
அதன்பிறகும் தாறுமாறாக ஓடிய கார், சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் இரண்டு துண்டாக உடைந்தது. காரில் இருந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
மின்கம்பம் சேதமடைந்ததால் சுற்றுபகுதியை சேர்ந்த 10 கிராமங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து அப்பகுதியில் பொதுமக்கள் கூட தொடங்கினர்.
போலீஸ் விசாரணை
இந்த விபத்து குறித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜன், ஜான் கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கார் மோதி காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கவிழ்ந்து கிடந்த கார் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது சாமிதோப்பு அருகிலுள்ள செட்டி விளையை சேர்ந்த ஜவகர் (24) என்பவர், நண்பரின் காரை ஓட்டியதும் தெரிய வந்தது. இந்த விபத்து தொடர்பாக தப்பி ஓடிய ஜவகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story