ஆண்டாள் சூடிய மாலை அழகர்கோவில் சென்றது


ஆண்டாள் சூடிய மாலை அழகர்கோவில் சென்றது
x
தினத்தந்தி 27 April 2021 1:37 AM IST (Updated: 27 April 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சிக்காக ஆண்டாள் சூடிய மாலை அழகர்கோவில் சென்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த மாலையை அணிந்து கொண்டு இறங்குவது வழக்கம்.
அந்த வகையில் இன்று அழகர்கோவில் வளாகத்திலேயே ஆற்றில் அழகர் இறங்குகிறார். இதற்காக நேற்று ஆண்டாளுக்கு பிரமாண்ட மாலை அணிவித்து அதனை அழகர்கோவிலுக்கு அனுப்பும் வைபவம் நடைபெற்றது. 
இதற்காக ஆண்டாளுக்கு சிறந்த முறையில் தயார் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார்.
 இதன் பின்னர் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆண்டாள் அணிந்த மாலை ஒரு கூடையில் வைத்து அதனுடன் இரண்டு கிளி மற்றும் பட்டு வஸ்திரம் ஆகியவை கொண்டு செல்லப்பட்டது.
கோவிலில் இருந்து கிளம்பி மாட வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கொண்டு வரப்பட்டு பின்னர் காரில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.  ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து இன்று ஆற்றில் அழகர் இறங்குகிறார்.


Next Story