மது விற்ற 6 பேர் கைது
சாத்தூர் பகுதியில் மது விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
முழு ஊரடங்கின் போது சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் மற்றும் பழனி தலைமையில் இரு பிரிவுகளாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாத்தூர் அருகே கண்மாய் சூரங்குடியில் வைத்து மதுபாட்டில் விற்ற சாத்தூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த திலகராஜ் (வயது 34), என்பவரிடம் இருந்து 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல பெரிய கொல்லபட்டி விலக்கு அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற அமீர்பாளையத்தை சேர்ந்த முனியசாமி (43), நாரணாபுரம் பஸ் ஸ்டாப் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற இனாம் ரெட்டியாபட்டியை சேர்ந்த பழனிக்குமார் (35), அமீர்பாளையம் கருப்பசாமி கோவில் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேபகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேபோல அதைபோல சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சாத்தூர் குருலிங்கபுரத்தில் வைத்து மதுபாட்டில் விற்ற அண்ணாநகரை சேர்ந்த ஜெயமாரிமுத்து ( 35), சாத்தூர் முனியசாமி கோவில் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு நகரை சேர்ந்த சங்கர் (45) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story